சாயிபாபா வித்தியாலயம் நடுநிலைப் பள்ளி
சாயிபாபா கோவிலின் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏழை குழந்தைகளுக்காக காலஞ்சென்ற தியாகி திரு ஏ.வி.கே. சாரி அவர்களால் இப்பள்ளி தொடங்கப்பெற்றது.
இப்பள்ளி பூஜ்ய ஸ்ரீ நரசிம்மஸ்வாமி அவர்களால் 1945- ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பெற்றது பூஜ்ய ஸ்ரீ நரசிம்மஸ்வாமி அவர்கள் தென்னாட்டில் ஷீர்டி சாய்பாபாவின் அருமை பெருமைகளை பரப்பி வந்த காலத்தில் கோவையில் வாணிபம் செய்து வந்த சேலம் சி வரதராஜய்யா அவர்கள் ஷீர்டி சாய்பாபாவின் அருள் உள்ளம் கொண்டு, இப்போதுஉள்ள இடத்தை வாங்கி ஸ்ரீ நாக சாய் மந்திர் ஏற்படுத்தப்பட்டது திரு ஏ.வி.கே. சாரி அவர்களும் திரு சி. வரதராஜய்யா அவர்களுடன் இருந்து வந்தார். திரு ஏ.வி.கே. சாரி அவர்கள் ஸ்ரீ நாகசாய் அறக்கட்டளை நிர்வாகத்தினரிடம் அனுமதி பெற்று 1946- இல் ஸ்ரீ சாய் கன்யா வித்யாலத்தை ஆரம்பித்தார் . சாய் கன்யா வித்தியாலயம் நடைபெற்ற பின் 1947 ஆகஸ்ட் முதல் சாய் கன்யா வித்தியாலயம் சாய்பாபா வித்தியாலயம் ஆதாரப்பள்ளியாக மாற்றப்பட்டது. அப்போது ஒரு சில ஆசிரியர்களுடன் இப்பள்ளி நடைபெற்று வந்தது.
இப்பள்ளிக்கு 16-5-1949 -இல் திரு வினோபா, 15-8-1949- இல் அப்போதைய உணவு அமைச்சர் ரோச் விக்டோரியா, 16-8-1949-இல் முன்னாள் குடியரசு தலைவர் நீலம் சஞ்சீவிரெட்டி, 14-3-1951-இல் நாமக்கல் வே ராமலிங்கம் பிள்ளை, 26-8-1957-இல் சர்தார் அ.வேதரத்தினம் 13-7-1952-இல் முன்னாள் மகாராஷ்டிரா ஆளுநர் திரு சி.சுப்ரமணியம் போன்ற பெரியோர்களும் 17-9-1973-இல் அந்நாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ரா.மாணிக்கவாசகம் போன்றோரும் வருகை தந்துள்ளனர்
பள்ளி படிப்படியாக உயர்ந்து வளர்ந்துள்ளது. சுற்று வட்டாரத்தில் மக்கள் குடியேற்றம் அதிகம் ஆக ஆக பள்ளியில் மாணாக்கர் தொகையும் கூடி கொடே வந்தது. பள்ளிக்கு ஆரம்பத்தில் ஒரு நல்ல கட்டிடம் இருந்தது பின் 1965 இல் ஒரு கட்டிடம் கட்டப்பட்டது. அதன்பின் கீற்றுf]] கொட்டகை போடப்பட்டது. பள்ளியின் ஸ்தாபகர் திரு ஏ. வி. கே. சாரி அவர்கள் 1975 இல் காலமானார் அதன்பின் நிர்வாகத்தை ஸ்ரீ நாக சாய் அறக்கட்டளை ஏற்று கொண்டது தற்போதைய பள்ளியின் செயலர் திரு s. பாலசுப்ரமணியத்தின் தந்தையும் அப்போதைய அறக்கட்டளையின் அங்கத்தினருமான திரு சி .ஆர். எஸ். மன்னாடியார் அவர்களால் ஒரு கட்டிடம் ரூ.40,000/- நாற்பதுஆயிரம் செலவில் அன்பளிப்பாக கட்டி கொடுக்கப்பட்டது. அதன்பின் ஸ்ரீ நாக சாய் அறக்கட்டளையின் மூலம் சுமார் ரூ. 2,00,000/- (இரண்டு லட்சம்) செலவில் எட்டு வகுப்பறைகள் கொண்ட 3 கட்டிடம் கட்டப்பட்டது. கடந்த 1990 -ஆம் ஆண்டு மாணவ மாணவிகளுக்காகவும் ஆசிரியர்களுக்காகவும் சுமார் ரூ.1,00,000/- (ஒரு லட்சம்) செலவில் சுகாதார வசதி தனி தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளியின் ஆரம்ப வளர்ச்சிக்கு வித்திட்டவர் திரு ஏ. வி. கே. சாரி அவர்கள் மற்றும் பள்ளியின் நிர்வாக குழுவில் தலைவர் செயலர் அங்கம் வகித்தவர்களான திரு கே. வி. நாராயண ரெட்டி திரு எஸ். செல்லப் கவுண்டர் திரு எஸ். ரகோத்தமன் திரு.o எஸ்.ராமலிங்கம் ,டாக்டர்.o.எஸ். தியாகராஜன், திரு கே. ஆர் .பழனிசாமி, திரு வி சிவராமகிருஷ்ணன் முதலியோர் ஆவார்கள் . தற்போதைய நிர்வாக குழுவில் தலைவர் திரு பி. கன்னையா பிரசாத் ,செயலர் எஸ். பாலசுப்ரமணியம் பொருளாளர் திரு கே. என். கே. விஸ்வநாத் ,அங்கத்தினர்கள் திரு. ஆர். கோவிந்தராஜன்.
பள்ளியின் வளர்ச்சியில் ஆசிரியர்கள் பங்கு கொண்டு சிறந்த முறையில் பணியாற்றியுள்ளனர் மூன்று முறை பள்ளி சீரமைப்பு மாநாடு நடந்துள்ளது. அதில் பள்ளிக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் மூலம் பெற்றுள்ளோம். கடைசியாக 1988 ஆம் ஆண்டு பள்ளி சீரமைப்பு மாநாடு மணி மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. அதில் எங்கள் பள்ளி சிறப்புற பங்கு கொண்டது. அம்மாநாட்டில் சிறந்த முறையில் பணியாற்றியதற்காக தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் திருமதி எம். கிரேஸ் ஏசுடையாள், திருமதி எம். கமலம், செல்வி வி. வேதவல்லி, திருமதி ஆர். காமாட்சி, திருமதி ஏ. அமிர்தவல்லி, திருமதி ஆர். மரகதம், திருமதி என். நாகலோசலை ஆகியோர் தமிழக கல்வி இயக்குனர் திரு கோபாலன் அவர்களால் பாராட்டப்பட்டு, பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளனர். அன்றைய பள்ளி துணை ஆய்வாளர் திரு ஆர். கந்தசாமி B.sc.,B.T., அவர்கள் ஆசிரியர்களையும் தலைமை ஆசிரியரையும் பாராட்டி ஆய்வுக் குறிப்பேட்டில் எழுதியுள்ளார்.
பள்ளியின் வளர்ச்சியில் பொது மக்களும் பங்கு கொண்டுள்ளனர் குறிப்பாக லிபியா டாக்டர் ஜெயச்சந்திரன் அவர்கள், திருமதி கல்யாணி அம்மா அவர்கள் குறிப்பிட்ட தொகை ஸ்ரீ நாக சாய் அறக்கட்டளையின் பேரில் டெபாசிட் செய்து, அதன் மூலம் வரும் வட்டித்தொகையை கொண்டு ஏழை குழந்தைகளுக்கு புத்தங்ககள், நோட்டு புத்தங்ககள், முதலியவை ஒவ்வொரு வருடமும் வாங்கி கொடுக்கப்பட்டு வருகிறது. எஸ் .ஆர். பி .மில் திரு பி. விஜயகுமார் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏழை குழந்தைகளுக்காக, புத்தங்ககள் நோட்டு புத்தகங்களுக்காக ரூ.5௦௦/- கொடுத்து வருகிறார். திருமதி ஹட்டhhpah அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 150 ஏழை குழந்தைகளுக்காக சீருடை வழங்கி வருகிறார்கள். இது தவிர காந்திபுரம் அரிமா சங்கம், பள்ளியின் பழைய மாணவர் சி துரைசாமி, போன்றவர்கள், பள்ளியில் நடைபெறும் சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழாவிற்கு இனிப்பு வழங்கி வருகிறார்கள் திரு சி .ஆர். பாலசுந்தரம் என்பவர் 7 தென்னை மரங்களை நட்டு கொடுத்து உதவியுள்ளார்கள்.
மாணவர்களுக்காக சென்னை வானொலி நிலையம், பாடசம்பந்தமான நிகழ்ச்சிகளை வானொலி மூலம் நடத்திக்கொண்டு வருகிறது. அதை ஒவ்வொரு நாளும் மாணவர்களை கேட்க வைத்து, மாத கடைசியில் அதற்கான அறிக்கையை சென்னை வானொலி நிலையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அதில் தினம்தோறும் சரியான முறையில் கேட்டு, எந்த பள்ளி அறிக்கையை அதிகமாக அனுப்பி வைக்கிறதோ, அப்பள்ளிக்கு ஒவ்வொரு ஆண்டும் சென்னை வானொலி நிலையமும் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகமும் இணைந்து நடத்தும் விழாவில் ஒரு கோப்பையும் நற்சான்றிதழும் கொடுப்பார்கள். எங்கள் பள்ளி 1988 -1989 , 1990 – 1991 , 1991 – 1992 ஆகிய மூன்று ஆண்டுகள் கோப்பையும் நற்சான்றிதழும் பெற்றுள்ளது.
பள்ளியின் வளர்ச்சியில் ஸ்ரீ நாகா சாய் அறக்கட்டளை தலைவர் , உபதலைவர், செயலர் ஆகியோர் மிகுந்த அக்கறை காட்டி வருகின்றனர்.
பள்ளியில் படிக்கும் ஏழை மாணாக்கர் 600 பேருக்கு அரசால் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. சத்துணவு உண்ணும் குழந்தைகளுக்கு அரசு, இலவச புத்தகங்கள், சீருடை, காலணி ஆகியவைகளை வழங்கி வருகிறது. நிர்வாகத்தால் சத்துணவிற்கு தனியாக ஒரு கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. சத்துணவு உண்ணும் குழந்தைகள் தவிர, ஒவ்வொரு வாரமும் ஏழை குழந்தைகளுக்கு. ஸ்ரீ நாகசாய் அறக்கட்டளையில் விருந்துணவு வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது 2 ஆசிரியர்களும் , 14 ஆசிரியைகளும் உள்ளனர். தற்போதுள்ள மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 720. பள்ளி வருங்காலத்தில் உயர்ந்து இந்த வட்டாரத்திலேயே சிறந்த பள்ளியாகத் திகழும் என்பதில் எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை.
Download Mobile App Now!