ஸ்ரீ சாயிபாபா சமாதி நூற்றாண்டு மஹா உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீ சாயிபாபா சன்ஸ்தான் டிரஸ்ட், ஷீரடி மற்றும்

ஸ்ரீ நாகசாயி டிரஸ்ட் கோயமுத்தூர்

இணைந்து, பக்தர்களுக்காக ஸ்ரீ சாயிபாபா பாதுகை தரிசனம் விழாவானது 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் கோயமுத்தூர், மேட்டுப்பாளையம் ரோடு, ஸ்ரீ நாகசாயி மந்திரில் (சாயிபாபா கோவில்) நடைபெற இருக்கின்றது,

வரும் 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் நாள் சத்குரு ஸ்ரீ சாயிபாபா சமாதி நூற்றாண்டு நிறைவு விழாவானது ஸ்ரீ சாயிபாபா சன்ஸ்தான் டிரஸ்ட், ஷீரடி மற்றும் உலகெங்கிலும் வாழும் சாயிபாபாவின் பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்படவிருக்கின்றது, மேலும் இந்த விழாவானது ஸ்ரீ சாயிபாபா சன்ஸ்தான் டிரஸ்ட், ஷீரடி அவர்களால் 2017ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து 2018ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி வரை வெகு விமர்சையாக கொண்டாடப்படவிருக்கின்றது,

மேற்படி விழாவின் ஒரு பகுதியாக ஸ்ரீ சாயிபாபா சன்ஸ்தான் டிரஸ்ட், ஷீரடி அவர்களால் ஸ்ரீ ஷீரடி சாயிபாபாவின் அசல் பாதுகையானது எடுத்து வரப்பட்டு “ஸ்ரீ சாயிபாபா பாதுகை தரிசனம்” தமிழ்நாட்டில், கோயமுத்தூர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஸ்ரீ நாகசாயி மந்திரில் (சாயிபாபா கோவில்) நடைபெற இருக்கிறது,

நாம் நம் வாழ்நாளில் கிடைப்பதற்கரிய இந்த ஸ்ரீ சாயிபாபா சமாதி நூற்றாண்டு விழாவின் ஓர் அங்கமான “ஸ்ரீ சாயிபாபா பாதுகை தரிசனம்” விழாவில் கலந்து கொண்டு நமது சத்குரு ஸ்ரீ சாயிபாபாவின் அருளையும் ஆசிகளையும் பெற்றுக் செல்வோம்.

Copyright © Sri Naga Sai Trust, Coimbatore. All Rights Reserved