அன்னதானம் – ஓர் புனித அர்ப்பணிப்பு

“தானத்தில் சிறந்தது அன்னதானம்” என்ற கூற்றை அனைவரும் கேட்டிருப்போம். குறிப்பாக ஆன்மீகத்தில் ஈடுபடுபவர்களுக்கு உணவு அளிப்பது நம் கலாச்சாரத்தில் தொன்றுதொட்டு இருந்து வந்துள்ளது.

“நீங்கள் மிகுந்த பசியில் இருக்கும்போது உங்கள் தட்டில் உள்ள உணவினை உங்கள் அருகில் பசியில் இருப்பவருக்கு வழங்கினால் உங்கள் பலம் அந்த உணவு உண்பதைக் காட்டிலும் அதிகமாகும்” என்று புத்தர் தன் சீடர்களுக்கு கூறினார். உண்மையில் இது வெறும் தத்துவமல்ல. இதனை நம் அனுபவப் பூர்வமாகவே பார்க்க முடியும். நாம் பிறருக்கு ஏதேனும் ஒன்றை வழங்கும்போது கிடைக்கக் கூடிய அற்புத உணர்வினை நம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

அதிலும் உணவு என்பது மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக உள்ளது. நாம் பிறருக்கு வழங்கும் உணவு, அவரின் வாழ்வை நீட்டித்துக்கொள்ளும் சக்தியை அவருக்கு வழங்குகிறது. அன்னதானம் நம் கலாச்சாரத்தில் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு அற்புதத் தன்மையாகும். இது நம் கலாச்சாரத்தில் ஆன்மீக வளர்ச்சிக்கான பாதையாகப் பார்க்கப்படுகிறது.

Share the Post

சாதே வாடா

சீரடியில் முதல் முதலில் கட்டிய " சாதே வாடா "..... வாடா என்றால்…

ஸ்ரீ ஸாய் ஸத்சரித்ர மூல மந்திர ஜப விதி

ஸ்ரீ ஸாய் ஸத்சரித்ர மூல மந்திர ஜப விதி அஸ்ய ஸ்ரீ ஸாய் ஸத்சரித்ர…

குரு பூர்ணிமா நாளில் குருநாமம்.

உலகத்தில் உள்ள அனைவருக்கும் செல்வத்தின் மீது ஆசை. அழியக் கூடிய…