ஸ்ரீ நாகசாயி கோவில்ன் அற்புதமான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

 

அன்பார்ந்த சாயி பக்தர்களே,

நமது ஸ்ரீ நாகசாயி மந்திர் (சாயிபாபா கோவில், கோயமுத்தூர்) இன் “அஸ்டபந்தன மகா கும்பாபிஷேகம்” மற்றும் “மஹா சம்பிரோக்க்ஷனம்” ஆகியவை விரைவில் நடைபெற இருக்கின்றன.

மேற்படி கும்பாபிஷேக விழாவின் ஒரு பகுதியாக ஸ்ரீ நாகசாயி கும்பபிஷேக மலர் (புத்தகம்) வெளியிடவும், அப்புத்தகத்தில்  ஸ்ரீ நாகசாயி மற்றும் புத்து கோவில் ஆகியவற்றின் பக்தர்களின் அற்புதமான அனுபவங்களை இணைத்து வெளியிடவும் ஸ்ரீ நாகசாயி ட்ரஸ்ட் நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.

பக்தர்கள் ஸ்ரீ நாகசாயி மற்றும் புத்துக்(புற்றுக்) கோவில் ஆகியவற்றின் அற்புதமான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஸ்ரீ நாகசாயி பக்தர்கள் தங்கள் அனுபவங்களை அஞ்சல்துறை மூலமாக கடிதத்தில் அனுப்பவும் அல்லது கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ரீ நாகசாயி பக்தர்கள் அனுபவ கடித பெட்டியில் இடவும்.

ஸ்ரீ நாகசாயி பக்தர்களின் அனுபவங்கள் கடிதமானது,  கடிதத்தை எழுதுபவரின் பெயர், தொடர்பு எண் மற்றும் முகவரி ஆகியவற்றைக் கொண்டிருக்க  வேண்டும்.

 

Spread the love!